BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Your Title


Your Title


MusicPlaylist

10 ஆக., 2009

வானொலி........!

வானொலி அல்லது ரேடியோ (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிவெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும்.

மின்காந்த அலைகளின் வழி செய்திகளையும் அறிவுப்புகளையும், பாட்டு உரையாடல் முதலியவற்றின் ஒலியலைகளை ஏற்றி இப்படி வான் வழியே வெலுத்தி ஆங்காங்கே
மக்கள் பெறுமாறு இத் தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி என்பர்.

இம்மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொன்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது.

அதிர்வெண்......!

அதிர்வெண் (Frequency) என்பது ஒரு நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி நிகழ்வு நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும். இது ஏர்ட்சு என்ற அலகில் அளக்கப்படுகிறது.

ஏர்ட்சு அதிர்வெண்ணை அளக்கும் அலகாகும். அதிர்வெண் ஒரு வினை (process) அல்லது அலையில் (signal) ஒரு நொடியில் எத்தனை சுழற்சிகள் நடைப்பெறுகின்றன என்பதைக் குறிக்கும் இயற்பியல் பண்பாகும். ஒரு ஏர்ட்சு அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும் அளவு. இது ஒரு உலக முறை அலகாகும். நொடி-1 என்பதும் இதற்கு ஈடான அளவேயாகும்.
மின்காந்தவியலில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய செருமானிய இயற்பியலாளர் ஐன்ரிச் ஏர்ட்சை நினைவுக்கொள்ளும் வகையில் இவ்வலகு பயன்படுத்தப்படுகிறது.

அலை அலை ..........!

அலை என்பது ஒரு தடை அல்லது கலகம் எற்ப்பட்ட பொருட்களிள் இருந்து உருவாகம். இது அந்தரம் மற்றும் சமயம் ஆகியவற்றை ஒற்றி சார்ந்திருக்கும் உதாரணம்மாக ஏரியில் ஒரு சிறியக் கல்லை எறிந்தால் அது வட்டம் வட்டம்மாக் அலைகளை உருவாக்கும். இவ்வாரு மின்காந்த அலை, ஒலியலை, கடல் அலை போன்று பல அலைகள் உள்ளன.

அலை நீளம் என்பது ஒரு அலையின் இரு மீழும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அளக்கப் பயன்படும் எல்லா அளவீடுகளும் அலை நீளத்தையும் அளக்கப்பயன்படுத்தலாம். பொதுவாக இப்பதம் வானொலி மற்றும் மின் காந்த அலைகளுக்கே பயன்படுத்தப்படும். சைன் அலை வடிவங்களில் இரு முடிகள் அல்லது இரு தாழிகளிடையேயான தூரம் அலை நீளமாக கொள்ளப்படும்.
அலையானது ஒரு முழு அலை இயக்கத்தை ஆற்றி முடிக்க எடுக்கும் நேரம் அலைவு காலம் எனப்படும

வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட ஸைன் அலைகள் மேலே உள்ளன. ஒவ்வொரு அலையும் தனக்கு மேலே உள்ள அலையை விட கூடுதல் அதிர்வெண் உடையது.

தமிழ் ஒலிபரப்புத்துறை.......!

தமிழ் ஒலிபரப்புத்துறை என்பது தமிழில் ஒலிபரப்பு செய்யப்படுவதையும், அத்துறையில் ஈடுபட்டுள்ள தமிழர்களையும், அத்துறைசார் நுட்ப கலைத்துறை புலத்தையும், வரலாற்றையும் குறிக்கின்றது.

மார்க்கோனி 1897 இல் வானொலி நிலையம் ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்ததார். அமெரிக்காவில் 1907 ம் ஆண்டு ஒலிபரப்பு முன்னோட்டங்கள் ஆரம்பித்தன.

1920 களிலேயே வானொலி ஒலிபரப்பு வடிவம் பெற்றது. இலங்கையில் 1923 ஆம் ஆண்டிலேயே ஒலிபரப்பு சோதனை முயற்சிகள் நடைபெற்று, 1925 இல் சீரான ஒலிபரப்பு துவங்கப்பட்டது.

தமிழின் ஒலிபரப்புத்துறை ரேடியோ சிலோனின் மூலமே தொடங்கியது.

வானொலி நிகழ்ச்சிகள்.......!

1) செய்திகள்
2) கலந்துரையாடல்
3) நேர்முக வர்ணை
4) போட்டி நிகழ்ச்சிகள்
5) வானொலி நாடகங்கள்
6) விபரண நிகழ்ச்சிகள்,
7) பெட்டக நிகழ்ச்சிகள்
8) அறிவித்தல்கள்
9) ஆபத்துதவி நிகழ்ச்சிகள்
10) வாழ்த்துக்கள்
11) விளம்பரங்கள்
12) வானொலிச் சந்தை
13) நகைச்சுவை சொல்லல்
14) பாட்டுக்கள்,
15) பாட்டு நிகழ்ச்சிகள்
16) சந்திப்புக்கள்,
17) பட்டிமன்றம்
18) சிறுவர் நிகழ்ச்சிகள்
19) இளையவர் நிகழ்ச்சிகள்
20) முதியவர் நிகழ்ச்சிகள்
21) பெண்கள் நிகழ்ச்சிகள்
22) சமய நிகழ்ச்சிகள்
23) இலக்கிய நிகழ்ச்சிகள்
24) ஆய்வுரைகள் - analysis
25) விமர்சனம்

ஒலியலை

ஒலிவடிவ தகவல்கள் வானலையாக ஏவப்பட்டு பரந்த புலத்தில் இருக்கும் மக்களால் வானொலி ஊடாக கேட்கப்பதலை ஒலிபரப்பு எனலாம்.

வாய்வழி அல்லது கேட்கப்படக் கூடிய ஒலிகளை ஏவவும், வானொலி ஊடாக பெறவும் அலைக்கம்பம் உதவுகின்றது.

ஒலிபரப்பின் கண்டுபிடுப்பு தகவல் தொழில்நுட்ப துறையின் ஒரு மைல்கலாகும்