BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Your Title


Your Title


MusicPlaylist

26 டிச., 2009

நடக்கும் நடக்கும்............!


தொலைவில்
இருந்ததாலும்

தொலைபேசியில்

அடிக்கடி

அருகில்

வருகிறாய்
..........!
ஏதோ

உன்னை

தொட்டு

பேசுவது
போல
என்னுள்

ஒரு
கனவு
இருக்கட்டும்

என்றோ

ஒருநாள்

நடக்கத்தான்

போகுகிறது
...........!
என்று நான்
சொல்ல
வில்லை
அந்த
பிரமன்
சொன்னான்
போலும்.

உன் பாச வலை.........!


என் அன்பை
உன் பாச
வலைக்குள்
சிக்க வைத்தாய்

உன் அன்பை
கண்ட பின்பு
இந்த பூலோகம்
கூட
புழுதியாய் பட்டது
என் தாயின்
அன்பின் பின்பு
உன் பாச
வலைக்குள்..............!


14 நவ., 2009

அந்த நிமிடம்...........!


உன்னோடு பேசும்
ஒவ்வொரு
நிமிடமும்
எனக்கு

ஒவ்வொரு
நிசப்பதம்
என்று

என்
இதயத்தில்
இருந்து
வருகின்ற
ஒவ்வொரு

டக்
.... டக்.... டக்........
ஒலியும்
என்னிடம்
ரகசியமாய் சொல்கிறது ..........!

6 அக்., 2009

அன்றும் இன்றும் நான்.......!

அன்று

எழுதிய
கவிதைகள்
எல்லாமே
கற்பனைகள்
கண்ணால்
கண்டவைகள்
காதால் கெட்டவைகள்
கற்றவைகள்

மற்றவைகள்

உற்றவைகள்

இன்று


எழுதும்

கவிதைகள்

எல்லாமே
கனவுகள்
கனவின்
நிஜங்கள்
காதலின் உண்மைகள்
அனுபவத்தின்
அவலங்கள்
உன்
ஒவ்வொரு
வார்த்தையின்
வரிகள்
உன்
சிரிப்பு
மொத்தத்தில்
கவிதையே
நீ

கானல் நீர்...........!


உன்னால்
வடித்த
- என்

கண்ணீர்

கானல்
நீராய்

கரைகிறது
- அது
கடலின்

அலையோடு
கலந்து

கரையோதுன்குகிறது

21 செப்., 2009

என் முத்தம்.........!


உன்
கன்னம்

என்று
எண்ணி
முத்தம்
இட்டேன்
அது
காற்றின்
ஒலி
அலையோடு
கலந்து
தொலைந்தது
என்ன?
நான்
முத்தமிட்டது

தொலைபேசியிலா
.........?

உணர்த்தியது உன் வாசம்........!

என்
கண்களுக்கு
தெரியாத
உன்
உருவத்தை

உள்ளத்துக்கு

தேவதைய்

தெரிய

வைத்தாய்
உன்
அன்பின்
வாசத்தால்
.........!

உன் முதல் முத்தம்.........!

நான்
உனக்கு
முதல்
முதல்
தந்தது
உன் பிறந்தநாள்
முத்தம்

நீ

எனக்கு
முதல்
முதல்
தந்தது
உன்
காதல்
முத்தம்

என்பதை

என்
பிறந்தநாள்
உன்
முத்தம்
சொல்லுகிறது
......!

18 செப்., 2009

என் கதை......!

நீ சொன்ன
ரு சொல்லில்
சொக்கி போனது
என் சொப்பனங்கள்
சோகம் என்றாலும்
சுகமானது காரணம்
இது நீ
தந்த சோகம்
என்னவளே........!

இனிமை இனிமை .........!

உன் குரலை
கேட்ட நாள்
முதல்
அந்த குயிலின்
குரலை கூட
கேட்க மருக்குறது
என் செவிகள்...........!

தூது அனுப்புகிறேன்.........!

தூது அனுப்புகிறேன்

உன்னிடம்
தூவி
சொல்கிறது
அவனிடம்

என்ன ?
என்னை விட்ட
அவன் அழகு
என்பதனாலோ
என்னவோ
?


14 செப்., 2009

உன் சுவாசக்காற்று..........!

கண்மணியே என்

கவிதை கொத்து
உன் கால் சலங்கை
எந்தன் சொத்து
நீ பிரிந்தாய்
என்னை விட்டு
நான் தவித்தேன்
தனிமைப்பட்டு
(கவினயன்)
a.m. அசீம்

3 செப்., 2009


*தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

* சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகி ஆகிறான்.

* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.

* வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.

* சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான்

17 ஆக., 2009

பூக்களும் காயம் செய்யும்...............!


போடி போடி கல்நெஞ்சி!

மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?



இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்


இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?



என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்

இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்


என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்


உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப்
பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்

செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்


சொல்லக்கூடிய

ஒரு கவிதையும்.

ஷங்கர் கவிதைகள்.......!









10 ஆக., 2009

வானொலி........!

வானொலி அல்லது ரேடியோ (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிவெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும்.

மின்காந்த அலைகளின் வழி செய்திகளையும் அறிவுப்புகளையும், பாட்டு உரையாடல் முதலியவற்றின் ஒலியலைகளை ஏற்றி இப்படி வான் வழியே வெலுத்தி ஆங்காங்கே
மக்கள் பெறுமாறு இத் தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி என்பர்.

இம்மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொன்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது.

அதிர்வெண்......!

அதிர்வெண் (Frequency) என்பது ஒரு நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி நிகழ்வு நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும். இது ஏர்ட்சு என்ற அலகில் அளக்கப்படுகிறது.

ஏர்ட்சு அதிர்வெண்ணை அளக்கும் அலகாகும். அதிர்வெண் ஒரு வினை (process) அல்லது அலையில் (signal) ஒரு நொடியில் எத்தனை சுழற்சிகள் நடைப்பெறுகின்றன என்பதைக் குறிக்கும் இயற்பியல் பண்பாகும். ஒரு ஏர்ட்சு அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும் அளவு. இது ஒரு உலக முறை அலகாகும். நொடி-1 என்பதும் இதற்கு ஈடான அளவேயாகும்.
மின்காந்தவியலில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றிய செருமானிய இயற்பியலாளர் ஐன்ரிச் ஏர்ட்சை நினைவுக்கொள்ளும் வகையில் இவ்வலகு பயன்படுத்தப்படுகிறது.

அலை அலை ..........!

அலை என்பது ஒரு தடை அல்லது கலகம் எற்ப்பட்ட பொருட்களிள் இருந்து உருவாகம். இது அந்தரம் மற்றும் சமயம் ஆகியவற்றை ஒற்றி சார்ந்திருக்கும் உதாரணம்மாக ஏரியில் ஒரு சிறியக் கல்லை எறிந்தால் அது வட்டம் வட்டம்மாக் அலைகளை உருவாக்கும். இவ்வாரு மின்காந்த அலை, ஒலியலை, கடல் அலை போன்று பல அலைகள் உள்ளன.

அலை நீளம் என்பது ஒரு அலையின் இரு மீழும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அளக்கப் பயன்படும் எல்லா அளவீடுகளும் அலை நீளத்தையும் அளக்கப்பயன்படுத்தலாம். பொதுவாக இப்பதம் வானொலி மற்றும் மின் காந்த அலைகளுக்கே பயன்படுத்தப்படும். சைன் அலை வடிவங்களில் இரு முடிகள் அல்லது இரு தாழிகளிடையேயான தூரம் அலை நீளமாக கொள்ளப்படும்.
அலையானது ஒரு முழு அலை இயக்கத்தை ஆற்றி முடிக்க எடுக்கும் நேரம் அலைவு காலம் எனப்படும

வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட ஸைன் அலைகள் மேலே உள்ளன. ஒவ்வொரு அலையும் தனக்கு மேலே உள்ள அலையை விட கூடுதல் அதிர்வெண் உடையது.

தமிழ் ஒலிபரப்புத்துறை.......!

தமிழ் ஒலிபரப்புத்துறை என்பது தமிழில் ஒலிபரப்பு செய்யப்படுவதையும், அத்துறையில் ஈடுபட்டுள்ள தமிழர்களையும், அத்துறைசார் நுட்ப கலைத்துறை புலத்தையும், வரலாற்றையும் குறிக்கின்றது.

மார்க்கோனி 1897 இல் வானொலி நிலையம் ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்ததார். அமெரிக்காவில் 1907 ம் ஆண்டு ஒலிபரப்பு முன்னோட்டங்கள் ஆரம்பித்தன.

1920 களிலேயே வானொலி ஒலிபரப்பு வடிவம் பெற்றது. இலங்கையில் 1923 ஆம் ஆண்டிலேயே ஒலிபரப்பு சோதனை முயற்சிகள் நடைபெற்று, 1925 இல் சீரான ஒலிபரப்பு துவங்கப்பட்டது.

தமிழின் ஒலிபரப்புத்துறை ரேடியோ சிலோனின் மூலமே தொடங்கியது.

வானொலி நிகழ்ச்சிகள்.......!

1) செய்திகள்
2) கலந்துரையாடல்
3) நேர்முக வர்ணை
4) போட்டி நிகழ்ச்சிகள்
5) வானொலி நாடகங்கள்
6) விபரண நிகழ்ச்சிகள்,
7) பெட்டக நிகழ்ச்சிகள்
8) அறிவித்தல்கள்
9) ஆபத்துதவி நிகழ்ச்சிகள்
10) வாழ்த்துக்கள்
11) விளம்பரங்கள்
12) வானொலிச் சந்தை
13) நகைச்சுவை சொல்லல்
14) பாட்டுக்கள்,
15) பாட்டு நிகழ்ச்சிகள்
16) சந்திப்புக்கள்,
17) பட்டிமன்றம்
18) சிறுவர் நிகழ்ச்சிகள்
19) இளையவர் நிகழ்ச்சிகள்
20) முதியவர் நிகழ்ச்சிகள்
21) பெண்கள் நிகழ்ச்சிகள்
22) சமய நிகழ்ச்சிகள்
23) இலக்கிய நிகழ்ச்சிகள்
24) ஆய்வுரைகள் - analysis
25) விமர்சனம்

ஒலியலை

ஒலிவடிவ தகவல்கள் வானலையாக ஏவப்பட்டு பரந்த புலத்தில் இருக்கும் மக்களால் வானொலி ஊடாக கேட்கப்பதலை ஒலிபரப்பு எனலாம்.

வாய்வழி அல்லது கேட்கப்படக் கூடிய ஒலிகளை ஏவவும், வானொலி ஊடாக பெறவும் அலைக்கம்பம் உதவுகின்றது.

ஒலிபரப்பின் கண்டுபிடுப்பு தகவல் தொழில்நுட்ப துறையின் ஒரு மைல்கலாகும்

26 ஜூன், 2009

உனக்கும் எனக்கும்......!


கடலோர மணத்தரையிலும்
ஆகாயத்தின் அடிப்பகுதியிலும்
உன் பெயரை எழுதினேன்
மீன்களும் நட்சத்திரங்களும்
உன் பெயரை
உச்சரிக்க வேண்டும்
என்பதட்ககவும்
இம்மண்ணுலக
உயிரினம் மட்டுமல்ல
உயிர் உள்ள அத்தனையும்
உன் பெயரை உச்சரிக்க
வேண்டும் என்பத்தட்கு......!



என் தாயே......!

என் தாயே......!
உன் மகனாக
எத்தனை பிறவி
எடுத்தாலும் உன்
மகனாகத்தான் பிறப்பேன்
உன் உயிரினை சுருக்கி
என் உடலினை வடித்தாய்
உன் உதிரத்தை உரையாக்கி
எனக்கு உயிர் கொடுத்தாய்
நான் முதல் கண்ட தெய்வமே......!

தென்றல்.....!

வீசும் காற்றுக்கும்
உனக்கும் ஏதோ

சம்பந்தம் இருக்குதடி......!
ஏனென்று கேட்கிறாயா..?
சற்றே சிந்தி
உன் கூந்தலின்
வாசத்தை சுமந்து
வருகிறதல்லவா......?

என்னவளே........!

என்னவளே.....!
எங்கிருந்தாயோ......?
எதை நீ சுமந்தாயோ.....?
அதை நீ இழப்பாய......?
உன் உள்ளத்திடம் கேட்டுப்பார்......?
உனக்கு இந்த
இரகசியத்தை உரைக்கும்......!





15 மே, 2009


5 மே, 2009

உனக்கும் அழகாகத்தான் இருக்கு.......!

பெண்கள்
எல்லாம்
அழகுக்கு

என்னவோ
மருதாணி

பூசுகிறார்கள்.....!

நீ
மட்டும்
ஏன்
நான்
பார்க்க
வேண்டும்
என்பதற்கு
மட்டும்
மருதாணி
பூசுகிறாயா........?
பூசு
உனக்கும்
அழகாகத்தான்

இருக்கு...........!

நீ நலமாய் வாழம்மா.........!

என் ராசாத்தி
நீ வாழம்மா
அந்த சந்தோஷ
உன் ராஜ
வாழ்க்கையை......!
எனக்குள்
எந்நாளும் என்
கண்களுக்குள்
உன்னை வைத்து
ஏமாளியாய் நான்
வாழ்வதற்க்கு
உன் பாதையை
சீர் செய்து
விடு நீ........!

நீ வரும் வேலை.....!


அந்தி
மாலைப்பொழுது

என்னவோ
பிந்திதான்
வருகிறது
ஏன்
நீ
வருகிறாய்

என்று
அஞ்சியா........?
எப்போது
நீ
வருவாய்
என்று
ஏங்குகிறது

என்
இதயம்
உன்
தயக்கத்தால்!
என்
மயக்கம்
கூட
மங்குகிறது
உன்
வரவுக்காக.......!

இது யார் போட்ட கோலம்........?

என் வீட்டு
முற்றத்தில் நீ
நடந்த பொது
போடுகிறது
ஒரு கோலம்
உன் கால்
கொலுசின்
மணிகள் இப்போ
உன் வீட்டு
முற்றத்தில்
யார் போட்டது
கோலம் ........?

4 மே, 2009

வருடிப்பார் புரியும்........!

எத்தனை நாள்
என்
ரோமங்கள்
உன்
கன்னங்களை
வருடுவது

இப்போது

வருடுவதை

அனுபவித்து

பார்
உனக்கும்
உன்
கண்களில்
ஒளிர்கின்ற
அந்த
நிலவிற்கும்
தெரிந்தே
இருக்கும்.......!

பிரம்மனுக்கு ஒரு மனு.........!

நான் உனக்கு
கணவன்

ஆவதை
விட
நீ
எனக்கு
மனைவியாவது

தொலைதூரம்

அதற்காகத்தான்

எழுதுகிறேன்

ஒரு
மனு
இந்த
அழகியை
வடித்த
அந்த
பிரம்மனுக்கு
.........!

ஏன் என் காதலை மறுக்கிறாய்.........!

காதலித்த பின்பு
கவிஞனானேன்

கபடனானேன்

கள்வனானேன்

காமத்தின்

கண்ணனானேன்

கண்களில்

கவிவடித்தேன்

ஏன்
என்
காதலை
மறுத்தாய்........!

கனாக்காணும் காலம்......!

காதல் வந்த போது
கசப்பு
இனித்தது
கடலலையின்
ஒலி
காற்றோடு
கலக்கச்சொன்னது

கல்லறையின்

கண்ணீர்த்துளி

கலந்தது

கடந்து
போன
கனவுகளை

கனாக்காணும்
போது........!

29 ஏப்., 2009

எங்கே என் இதயம்.......?

திருடிய

என்
இதயத்தை
தந்து
விடு

என்னிடம்

ஏனெனில்........
என்னிடம்

இருப்பது

உன்

இதயம் ....!