அந்த நாள்
ஓடித்திரிந்து விளையாடிய
அந்த விளையாட்டு மைதானம்
காக்கை கொத்தி
அணில் கடித்து
மகிழ்ந்துண்ட --- உன்
தோட்டத்து மாங்காய்
செல்லமாய் ரசித்து
படம் பார்த்த
அண்ணன் அது 6600
செல் போன்
மனம் ஈர்க்கும்
கணபதி கோபுரம்
கமகமக்கும் பன்னீர்
வாசனை மனக்க
தேரின் பின்னே
நடந்து போன நாட்கள்
இவை எல்லாம் உனக்கு
நினைவு இருக்குமெனில்
என்னையும் உனக்கு
நினைவு இருக்கும்
என் அன்பே..........!
10 ஏப்., 2009
நினைவு இருக்கிறதா..........?
இடுகையிட்டது worldmazz நேரம் 3:21:00 முற்பகல் 0 கருத்துகள்
9 ஏப்., 2009
உனக்கினை யாரம்மா.........!
அம்மா........!
உன்னை விடவும்
உலகில் உயர்ந்தது
ஒன்றும் இல்லை
இல்லையம்மா.........!
நீதான் நீர்க்கடல்
நிலத்தை தாங்கும்
பூமா தேவி
உனக்கினை
யாரம்மா
என் தாயே.......!
இடுகையிட்டது worldmazz நேரம் 6:46:00 முற்பகல் 0 கருத்துகள்
அம்மா உன் பிள்ளை நான்.......!
ஆசை மகன்
அறியாத வயதில்
அலையடித்து
சாய்ந்து போனான்
சரிந்த என்னை
சங்கமிக்குறாய்
உன் மகனாக
உன் மகனாக
அம்மா.......
உன் பிள்ளை
நான் என்பதா?
அன்புடன் surenth
இடுகையிட்டது worldmazz நேரம் 3:05:00 முற்பகல் 0 கருத்துகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)